×

சித்தூர் மாநகரத்தில் 200 படுக்கைகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு

சித்தூர் : சித்தூர் மாநகரத்தில் 200 படுக்கைகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு இணை கலெக்டர் சீனிவாஸ் தலைமை தாங்கினார்.

சித்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுவாக எழுதி இணை கலெக்டரிடம் வழங்கினர். மனுவை பெற்று கொண்ட இணை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சித்தூரை சேர்ந்த சைதன்யா என்பவர் அளித்த மனுவில், ‘சித்தூர் நகரின் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட மையமான சித்தூர் நகரின் விரிவான வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

சித்தூர் மாவட்டத்தின் மையமாக சித்தூர் இருந்தாலும், அனைத்து வளர்ச்சியும் திருப்பதியில் குவிந்து வருகிறது. சித்தூரில் 200 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட வேண்டும். நீவா நதியை சுத்தப்படுத்தி ஆற்றை தூர்வார வேண்டும். சித்தூரில் புற்றுநோய் மருத்துவமனை, டயாலிசிஸ் மையம் அமைக்க வேண்டும். சித்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்த வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், ஏராளமான பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனைபட்டா, அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று 100க்கும் மேற்பட்டோர் மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட இணை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

The post சித்தூர் மாநகரத்தில் 200 படுக்கைகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : ESI hospital ,Chittoor ,ESI ,Dinakaran ,
× RELATED மாநகர் மாவட்ட திமுக சார்பில் மக்களின்...